இப்படி விளையாடினா எப்படி ஜெயிக்க முடியும்! தோல்வியை நொந்து கொண்ட கே.எல்.ராகுல்

அதிகமான கேட்சுகளை கோட்டை விட்டால் எவ்வாறு வெல்ல முடியாது. எளிதான கேட்சை நழுவவிடுவது போட்டியை வெல்ல துணை புரியாது என்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்தஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது.

208 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு ராஜ் பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்ததும், அவருக்கு துணையாக தினேஷ் கார்த்திக் 37 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்து மிகப்பெரிய ஸ்கோர் உயர்வுக்கு காரணாக அமைந்தனர்.

இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் கேட்சை கோட்டைவிட்டதும், ராஜத் பட்டிதாரிந் சதமும்தான் ஆர்சிபி வெல்ல காரணமாக இருந்தது.

இந்த தோல்வி குறித்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாங்கள் ஏன் தோற்றோம், தோற்றதற்கான காரணங்கள் வெளிப்படையானது. நாங்கள் களத்தில் ஒழுங்காக விளையாடவில்லை.

இரு அணிகளுக்கும் இடையிலான வேறுபாடு என்பது பட்டிதார் சதம்தான். எந்த ஒரு அணியில் டாப் 3 இடங்களில் உள்ள பேட்ஸ்மேன் ஒருவர் சதம் அடிக்கிறாரோ அந்த அணி பெரும்பாலும் வெற்றி பெறும். அந்த வகையில் ஆர்சிபி வென்றுள்ளது.

நாங்கள் வெல்ல முடியாததற்கு அந்த கேட்சை நழுவவிட்டதுகூட காரணமாக இருக்கலாம். எளிதான கேட்சை நழுவவிடுவது போட்டியை வெல்ல துணை புரியாது.

பட்டிதாருக்கு மட்டும் 3 கேட்சுகளை நழுவவிட்டோம். ஆர்சிபி நன்றாக பீல்டிங் செய்தனர், நாங்கள் மோசமாக செய்தோம்.

புதிய அணியாக வந்து 4-வது இடத்துக்குள் வந்தது பெருமையாக இருக்கிறது. இதில் கிடைத்த நல்ல விஷயங்களை அனுபவங்களை எடுத்துக்கொள்வோம்.

ஏராளமான தவறுகள் செய்தோம், ஒவ்வொருஅணியும் செய்வதுதான். அடுத்துவலுவாக வருவதற்கு முயல்வோம்.

இளம் வீரர்களைக் கொண்ட அணி, தவறுகளில் இருந்து பாடம் கற்று சிறந்த வீரர்களாக வருவோம்.

மோசின்கானுக்கு இது முதல் சீசன். ஆனால் அனுபவ வீரர் போல் சிறப்பாகப் பந்துவீசினார்.

வலைப்பயிற்சியில் கடுமையாக உழைத்தார். இந்த சீசனின் அனுபவம் மோசின்கானுக்கு பெரிதாக உதவும் அடுத்த சீசனில் வலுவாக திரும்புவோம்” எனத் தெரிவித்தார்.