வரும் நிதியாண்டில் மத்திய அரசு எத்தனை லட்சம் கோடி கடன் வாங்கப்போகிறது தெரியுமா?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எதிர்வரும் நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடி கடன் வாங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது நிர்மலா சீதாராமன் உரையாற்றுகையில், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 9.5 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டார்.

இந்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக வைத்திருக்க கடந்த பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எதிர்வரும் நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடி கடன் வாங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2021-22ம் நிதியாண்டில் மத்திய அரசு மொத்தம் ரூ.34.83 லட்சம் கொடி செலவு செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.5.54 லட்சம் கோடி மூலதன செலவினமும் அடங்கும்.

நடப்பு நிதியாண்டில் (2020-21) மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்கும் வைக்கும் நோக்கில் மத்திய அரசு சந்தையில் ரூ.80 ஆயிரம் கோடி கடன் வாங்கும். எதிர்வரும் 2021-22ம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதமாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.