பெண் கஞ்சா வியாபாரி உள்ளிட்ட 5 பேர் மீது குண்டாஸ்..!

சென்னை, எம்.கே.பி நகர் பகுதியில் பெண் கஞ்சா வியாபாரி உள்ளிட்ட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை, வியாசர்பாடி, பி.வி. காலனியை சேர்ந்தவர் ரமா(எ) அருப்பு ரமா(49). இவர், பிரபல கஞ்சா வியாபாரி. இவரை, எம்.கே.பி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைப்போன்று,   பல்வேறு வழக்குகளில் தொடர்புடயை வியாசர்பாடி, எஸ்.ஏ காலனியை சேர்ந்த அசோக் (எ) தொப்பை அசோக் (23). அருண் பாண்டியன்(22). ரவிக்குமார்(எ) பல்லு ரவி(25) ,மேற்கு குறுக்கு தெருவை சேர்ந்த முரளி கிருஷ்ணன்(38)ஆகியோரை, எம்.கே.நகர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவர்கள், ஐந்து பேரும், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எம்.கே.பி நகர் இன்ஸ்பெக்டர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, ஐந்து பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை, கமிஷனர் பிறப்பித்தார்.