தங்கம் விலை 2 நாட்களுக்குப்பின் சரிவு: இன்றைய நிலவரம் என்ன

தங்கம் விலை நேற்று மாற்றமில்லாமல் இருந்தநிலையில் இன்று அதிரடியாகக் குறைந்தது நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 12 ரூபாயும், சவரனுக்கு 96 ரூபாயும் விலை குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,350ஆகவும், சவரன், ரூ.42,800ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) கிராமுக்கு 12 ரூபாய் சரிந்து ரூ.5,338ஆகவும், சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 704 ஆக குறைந்துள்ளது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,338க்கு விற்கப்படுகிறது.

பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது, அமெரி்க்க பெடரல் வங்கியும்வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது.

இதன் காரணமாக சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் எச்சரிக்கையுடன் உள்ளதால், தங்கத்தின் தேவை குறைந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் விஷேச நாட்களும், முகூர்த்த நாட்களும் இல்லாத காரணத்தாலும் தங்கம் தேவை குறைந்துள்ளது. பட்ஜெட் அறிவிப்பு, பெடரல் ரிசர்வ் அறிவிப்பைப் பொறுத்து தங்கம் விலை மாறுபடும்.

தங்கத்தின் விலையில் நேற்று மாற்றம் ஏற்படாத நிலையில் இன்று கிராமுக்கு 12 ரூபாய் குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.74.70 ஆக இருந்தநிலையில் இன்று கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.74.50ஆகவும், கிலோவுக்கு 200 குறைந்து ரூ.74,500 ஆகவும் சரிந்துள்ளது.