பணம் வைத்து சூதாட்டம், 7 பேர் கும்பல் கைது

ஈரோடு, அந்தியூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கும்பல் கைதாகினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் , நகலூர் பெருமாள் பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய வருவதாக அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்ததகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற அந்தியூர் போலீசார். பெருமா பாளையம் ஈஸ்வரன் செங்கல் சூளை அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அந்தியூர் பகுதியைச் சேர்ந்த அருண் சக்கரவர்த்தி, கவி காளிதாசன், ஈஸ்வரன், ராமேஸ்வரன் ராஜ்குமார், விஸ்வநாதன், கோபி, மொடச்சூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் ஆகிய ஏழு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 16 ஆயிரம் மற்றும் 1 கார் 5 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர். மேலும்,

அவர்கள் 7 பேர்மீது அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.