கொல்ல வந்தவர் சிக்காததால் நண்பரை சரமாரியாக வெட்டிய கும்பல்

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில், கொல்ல வந்தவர் சிக்காததால் நண்பரை சரமாரியாக ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது.

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, யூ பிளாக்கை சேர்ந்தவர் டில்லி, இவரின் மகன் கதிரேசன்(29). இவர் கொருக்குப்பேட்டையில் உள்ள சோபா கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரின் நண்பர் கார்த்திக் (எ) குள்ள கார்த்திக் ஆவார். இவரை கொல்ல அடையாளம் தெரியாத 8 நபர்கள் காசிமேடு மீன் பிடி துறைமுகம் பகுதியில் சுற்றி திரிந்தனர். அப்போது குள்ள கார்த்திக் சிக்கவில்லை. அங்கு நண்பர் கதிரேசன் தென்பட்டார். குள்ள கார்த்திக் எங்கே என கதிரேசனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. உச்சந்தலையிலும் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். இது தொடர்பாக, காசிமேடு மீன் பிடி துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.