பொதுக்குழு விவகாரம்; காவல் நிலையத்தில் காத்திருந்த, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

அதிமுக பொதுக்குழு விவாகரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த விளக்கம் கொடுக்க, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் நீண்ட நேரமாக காவல் நிலையத்தில் காத்திருந்தார்.
சென்னை, வானகரத்தில், வருகின்ற 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது. இந்த பொதுக்குழுவிற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து, 26 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தங்களின் தரப்பின் விளக்கத்தை அளிக்க முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், திருவேற்கேகாடு காவல் நிலையம் வந்தார்.
விளக்கங்கள் அடங்கிய மனுவை , இன்ஸ்பெக்டரிடம் அளிக்க வந்தார். ஆனால், அங்கு இன்ஸ்பெக்டர் இல்லை. சப் -இன்ஸ்பெக்டர் மனுவை வாங்க மறுத்தார்.
இதனால், அவர் காவல் நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தார்.
காவல் நிலைய வளாகத்தில், அதிமுகவினர் அதிகளவில் கூடியதால், ஒரு வித பதட்டம் நிலவியது.
பின்னர், வெகு நேரம் கழித்து, இன்ஸ்பெக்டர் வந்தார். அவரிடம் விளக்கங்கள் அடங்கிய மனுவை பெஞ்சமின் அளித்தார்.
இதையடுத்து, அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.