ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு சென்னை குடியரசு தின விழாவுக்கு 6800 போலீசார் பாதுகாப்பு

சென்னையில், குடியரசு தின விழாவுக்கு, ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மட்டும், 6800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்தியா முழுவதும், வருகின்ற 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னையில், மெரினா உழைப்பாளர் சிலை அருகே , கவர்னர் , தேசியக்கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார்.

இதனையொட்டி காமராஜர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, கபில் குமார் ஆகியோரின் மேற்பார்வையில், 6800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.