சொத்து தகராறில், தந்தை கொலை; மகள்-மருமகன் கைது, கூலிப்படையை ஏவி கொன்றனர்

தென்காசி மாவட்டம்,  இலஞ்சி பகுதியில் மாந்தோப்பு சொத்து தகராறில், தந்தையை கொன்ற வழக்கில், மகள்-மருமகன் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையை ஏவி கொன்றது தெரியவந்தது.

தென்காசி மாவட்டம்,  இலஞ்சி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோட்டை மாடன் (82). இவருக்கு, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

மூத்த மகள் மைதீன் பாத், இரண்டாவது மகள் சந்திரா, மூன்றாவது மகள் ஸ்ரீதேவி ஆகியோர் கோட்டை மாடன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இலஞ்சி, தென்காசி ரோட்டில், கோட்டை மாடனுக்கு சொந்தமாக மாந்தோப்பு உள்ளது. கடந்த நான்காம் தேதி, கோட்டன் மாடன், மாந்தோப்புக்கு சென்றார். அதன் பிறகு, அங்கு அவர் கொல்லப்பட்டு கிடந்தார்.

குற்றாலம் போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில், கோட்டை மாடன் பிணத்தை மோப்பம் பிடித்த நாய், மைதீன் பாத் கணவர் பரமசிபன் (57) அவரின் பைக்கை சுற்றி வந்தது. இது, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது

பின் போலீசார் நடத்திய விசாரணையில், கோட்டை மாடன் கொலையில், மகள் ஸ்ரீதேவி, பரமசிவன்,கல்லிடைக்குறிச்சி வசந்தகுமார் (49), இலஞ்சி மகேஷ் (29) என தெரியவந்தது.

இவர்கள் நான்கு பேரை கைது செய்தனர். வீட்டு வேலை செய்து வந்த சேகர் தப்பிவிட்டார். இந்த கொலை குறித்து விசாரித்தபோது, கோட்டை மாடனின், ஒன்றரை ஏக்கர் மாந்தோப்பை, சந்திராவின் மகன் ஜெயக்குமாருக்கு எழுதி வைக்க இருந்ததாக தெரிகிறது.

சொத்து பிரச்சினையில், ஸ்ரீதேவி, கோட்டை மாடனுக்கு வக்கீல் நோட்டிசும் அனுப்பியிருந்தார்.

ஆனாலும், அவர்களுக்கு சொத்து கிடைக்காத ஆத்திரத்தில், ஸ்ரீதேவி, பரமசிவன் ஆகியோர் கூலிப்படையை சேர்ந்த வசந்தகுமா, மகேஷ் ஆகியோரை வைத்து,  கோட்டை மாடனை கொன்றது தெரியவந்தது.

இதற்காக, ரூ.1 லட்சம் பேசி வைத்து 15 ஆயிரம் கொடுத்துள்ளனர். நான்கு பேரும்,சிறையில் அடைக்கப்பட்டனர்.