10ம் வகுப்பு தேர்வில் தோல்வி; மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மூன்று பாடங்களில் தோல்வி அடைந்ததால், மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

சென்னை, பெரும்பாக்கம், எழில் நகர், குடிசை மாற்று வாரியம் எட்டடுக்கு குடியிருப்பை சேர்ந்தவர் செல்வி. இவர், அம்பத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். செல்வியின் மகன் முகேஷ் (15).

இவர், சென்னை  சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்   3 பாடங்களில் முகேஷ் தேர்ச்சி பெறவில்லை.

பெயிலாகி விட்டார். இதனால் மனமுடைந்த முகேஷ், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலின் பேரில்   பெரும்பாக்கம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, முகேஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.