பட்டப்பகலில், வீட்டுக்குள் புகுந்து பேராசிரியர் மனைவி படுகொலை; தங்க தாலிக்கொடிக்காக துணிகரம்

ஈரோடு மாவட்டம், பவானியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பேராசிரியர் மனைவி படுகொலை செய்யப்பட்டு, அவரின் தங்க தாலிக்கொடி திருடப்பட்டன.

 ஈரோடு மாவட்டம், பவானி, மேட்டு நாசுவன், கே,கே,நகர் , 3வது வீதியை சேர்ந்தவர் கணேசன் (60). இவர், குமாரப்பாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி வளர்மதி (55). இவர்களுக்கு, இரண்டு மகள்கள், திருமணமாகி, தனி தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை கணேசன் வெளியில் சென்றார். வீட்டில் வளர்மதி மட்டும் இருந்தார். செல்போனில் தொடர்பு கொண்டபோது, வளர்ர்மதி எடுக்கவில்லை வீட்டிற்கு வந்த கணேசன் அதிர்ச்சியடைந்தார்.

அங்கே, வளர்மதி ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கணேசனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

தகவல் கிடைத்து, சித்தோடு போலீசார் விரைந்து வந்தனர், வளர்மதியின் தங்க தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அவர், கொலையாளிகளிடம் போராடியுள்ளார். இதனால், அவரின் செல்போன் உடைக்கப்பட்டிருந்தது. பின்னர், போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.