திருமண நாளன்று சோகம்: மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி..!

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பகுதியில், திருமண நாளன்று மின்சாரம் பாய்ந்து ஜேசிபி டிரைவர் பலியானார்.

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் வடபழனி குமரன் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் விகரமன் (40), இவர் ஜேசிபி டிரைவர் ஆவார். இவரின் மனைவி சாந்தி, இவர்களுக்கு மகள், மகன் ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இன்று, அவர்களுக்கு திருமனம் நாள் ஆகும். மழை என்பதால், திருமண நாளை வீட்டிலேயே கொண்டாட விக்ரமன் முடிவு செய்தார். ஆனால், வீட்டின் ஆட்டு கொட்டகைக்கு மின் இணைப்பு கொடுக்க மின் வயரில் வேலை பார்த்தார்.

அப்போது, அதில், கசிவு இருந்து மின்சாரம் தாக்கி விக்ரமன் மயங்கினார். அவரை, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அரச்சலூர் போலீசார், விகரமனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.