சேவல் சண்டையிட்டு சூதாட்டம் நடத்திய 5 பேர் சிக்கினர்..!

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு முட்புதரில், சேவல் சண்டையிட்டு சூதாட்டம் நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

 ஈரோடு மாவட்டம், பெருந்துறை, வெள்ளோடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரு கும்பல் முட்புதரில் மறைந்தப்படி இருந்தனர். அங்கு சென்ர போலீசை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். சேவல்களை வைத்து சண்டையிட்டு, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை பிடித்தனர்.

விசாரணையில், கோவிந்தராஜ், சரவணன், சங்கர், சந்தோஷ், அன்பரசு என தெரியவந்தது. காவல் நிலையம் அழைத்து சென்று, 5 பேர் மீது வழக்கு பதிந்து சேவல்களை பறிமுதல் செய்தனர்.