கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்று, பிளஸ் ஒன் மாணவியிடம் அத்து மீறிய வாலிபருக்கு போக்சோ..!

 ஈரோடு மாவட்டம், அம்மா பேட்டையில், கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்று, பிளஸ் ஒன் மாணவியிடம் அத்து மீறிய வாலிபரை போக்சோவில் கைதாகினர்.

 ஈரோடு மாவட்டம், அம்மா பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆரான். இவரின் மகன் சாமு வேல் (21). இவர், மெக்கானிக். அந்த பகுதியை சேர்ந்த பிளஸ் ஒன் படிக்கும் 16 வயது மாணவியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாமுவேல் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கினார்.

பின்னர், இருவரும் அடிக்கடி பேசியதில், ஆசை வார்த்தை கூறி, மாணவிக்கு காதல் வலை விரித்தார். இந்த நிலையில், திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, கரும்பு தோட்டத்துக்கு மாணவியை சாமுவேல் அழைத்தார்.

அங்கு சென்ற மாணவியிடம் சாமுவேல் தன் அத்துமீறலை காட்டினார். அங்கிருந்து தப்பி வந்த மாணவி பெற்றோரிடம் கூறவே அம்மா பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் சாமுவேலை கைது செய்து, போக்சோவின் கீழ் சிறையில் அடைத்தனர்.