எங்க கட்சியில சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம்.. திமுகவுல அது நடக்குமா?.. பழனிசாமி கேள்வி

எடப்பாடி கே பழனிசாமி

அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம் ஆனால் அது போல் திமுகவில் நடக்குமா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அந்த தொகுதியின் அதிமுக வேட்பாளர் சக்ரபாணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம். ஆனால் திமுகவில் அது போல் ஆக முடியுமா?

அதிமுக

எல்லா துறைகளிலும் விருது வாங்கிய ஒரே மாநிலம் தமிழகம் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல்வர் பழனிசாமி தனது பேச்சின் போது, மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், வானூர் தொகுதியில் அதிமுக அரசு தொடங்கிய கலைக் கல்லூரி, மீனவர்கள் பகுதியில் தூண்டில் வளைவு போன்ற திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்தார்.

திமுக

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மட்டும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை, விழுப்புரம் விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திண்டிவனம், வானூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்