முன் விரோதம் காரணமாக ரவுடியை சரமாரியாக வெட்டிய 11 பேர் கும்பல் கைது..!

சென்னை, தண்டையார் பேட்டை பகுதியில் முன் விரோதம் காரணமாக, ரவுடியை சரமாரியாக வெட்டி கொல்ல முயற்சித்த 11 பேர் கும்பலை, ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர்.

சென்னை, தண்டையார் பேட்டை, திலகர் நகரை சேர்ந்தவர் பார்த்தி(எ) பாபா பார்த்திபன். இவர், அந்த ஏரியா ரவுடி நேற்று இரவு, அவர் வீட்டருகே நின்றிருந்தபோது, அங்கு ஒரு கும்பல் வந்து, தகராறில் ஈடுபட்டது.

பின்னர், அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில், பாபா பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை பார்த்ததும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

தகவல் கிடைத்து, வண்ணாரப்பேட்டைதுணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உயிருக்குப்போராடிய பாபா பார்த்திபனை மீட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் உயிருக்கு போராடி வருகிறார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஒரு மணி நேரத்தில், எட்டு பேர் கும்பலை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள், தண்டையார் பேட்டை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சேகர் (எ) கானா சேகர் (25), திலகர் நகரை சேர்ந்த அஜித் (எ) காவா அஜித் (20).

கொளத்தூரை சேர்ந்த யுவராஜ்(18), சுனாமி குடியிருப்பை சேர்ந்த பாலாஜி (எ) தாத்தா பாலாஜி(22). சேனியம்மன் கோயில் தெருவை சேர்ந்த  நாகராஜ்(19). ராகுல் (எ) ஆர்ச் ராகுல் (18).

சுனாமி குடியிருப்பை சேர்ந்த தமிழ் செல்வன் (18). இரட்டை குழியை சேர்ந்த சங்கர் (எ) பெரிய அப்புனு (24) ஆகியோர் என தெரிந்தது. முன் விரோதம் காரணமாக பாபா பார்த்திபனை கொல்ல முயற்சித்தது தெரியவந்தது.