போதை ஆசாமி கொலை, டியூப் லைட்டால் குத்தினார்

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில், போதையில் தகராறு செய்த நபரை டியூப் லைட்டால் குத்தி கொலை செய்தவரை தேடி வருகின்றனர்.

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, அருணாச்சலீஸ்வரர் கோயில் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலையை  சேர்ந்தவர் சூசைநாதன், இவரின் மகன் பீட்டர் (54). இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று இரவு அருணாச்சலீஸ்வரர் கோயில் தெரு, அரிசி கடை அருகில், பீட்டர் இருந்துள்ளார். அப்போது அவர் போதையில் இருந்ததாக தெரிகிறது. அங்கு இருந்த மன நலம் பாதிக்கப்பட்ட நபரிடம் பீட்டர் தகராறில் ஈடுபட்டார். அப்போது அந்த நபர் குப்பையில் கிடந்த டியூப் லைட்டை உடைத்து பீட்டரை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் கிடைத்து உதவி கமிஷனர் முகமது நாசர், இன்ஸ்பெக்டர் சரவனன் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர், பீட்டரை குத்தி கொன்ற காட்சி, சிசிடிவியில் பதிவாகி இருந்தது. தப்பி சென்ற அந்த நபரை தேடி வருகின்றனர்.