டாக்டர் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கியுள்ள படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன், யோகி பாபு, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணிகள் நேற்று முன் தினம் நிறைவடைந்தன. இதை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டாக்டர் படம் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து வரும் மார்ச் 26ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

டாக்டர் படத்தின் இறுதி கட்ட பணிகளுக்கு பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ள டான் பட வேலைகளில் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.