டாக்டர் டப்பிங் நிறைவு! – நெல்சனுக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கியுள்ள படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன், யோகி பாபு, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இறுதிகட்ட பணிகள் முடிந்ததும் வரும் ஏப்ரல் மாதம் டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணிகள் நேற்று நிறைவடைந்தன. இதை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டப்பிங் தியேட்டரில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த அவர் ‘டாக்டர் டப்பிங் பணிகள் நிறைவடைந்தன.. இந்த மகிழ்ச்சியான பயணத்துக்கு காரணமான இயக்குநர் நெல்சன் அண்ணா மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் படத்தின் இறுதி கட்ட பணிகளுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள பட வேலைகளில் நெல்சன் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.