குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்! பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள். சமூக அழுத்தங்களால் குழந்தைகளிடம் இருந்து அதிகமாக குடும்பத்தினர் எதிர்பார்த்தாலும் பிரச்சினைதான் என்று பெற்றோருக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி பரிக்ஷா இ சர்ச்சா என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

அதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு, அதிலிருந்து எவ்வாறு மீள்வது, மனஅழுத்தமின்றி தேர்வு எழுதுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்குகிறார்.

6-வது ஆண்டு பரிக்ஷா இ சர்ச்சாவுக்கான முன்பதிவு செய்யும் அவகாசம் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 30ம் தேதி முடிந்தது. இருப்பினும் இன்றுவரை விண்ணப்பிக்க அவகாசத்தை கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது.

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, “2022ம் ஆண்டைவிட, 2023ம் ஆண்டில் அதிகமான மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு 38.80 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். இதில் 31.24லட்சம் மாணவர்கள், 5.60 லட்சம் ஆசிரியர்கள், 1.95 லட்சம் பெற்றோர் அடங்குவர். கடந்த 2022ம் ஆண்டில் 15.70 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தார்கள்

150 நாடுகளி்ல் இருந்து மாணவர்கள், 51 நாடுகளில் இருந்து ஆசிரியர்கள், 50 நாடுகளி்ல் இருந்து பெற்றோர் 2023ம் ஆண்டு பரிக்ஷா இ சார்ச்சாவுக்கு முன்பதிவு செய்திருந்தார்கள்.

டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

சமூக அழுத்தம் காரணமாக குழந்தைகளிடம் இருந்து குடும்பத்தினர் அதிகமாக எதிர்ப்புகளை வைத்தால்அது பிரச்சினையாகிவிடும்.

வெற்றியை பெறுவதற்காக அரசியலில் இருக்கும் நாங்கள அதிக அழுதத்தை எதிர்கொள்கிறோம். எதிர்ப்புகளை ஒருவரின் திறமையுடன் கண்டிப்பாகப் பொறுத்திப் பார்க்க வேண்டும். கவனத்துடன் செயல்பட வேண்டும்.

நாடுமுழுவதும் உள்ள மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எனக்கு கடிதம் எழுதி, தேர்வு நேரத்தில் அறிவுரை கோருகிறார்கள். இது எனக்கு மிகவும் உற்சாகமான, ஊக்கமான அனுபவமாக இருக்கிறது.

குழந்தைகளே, நீங்கள், உங்கள் தாயின் நேர மேலாண்மையை எப்போதுதாவது கவனித்திருக்கிறீர்களா. கடுமையான அழுத்தங்கள் இருந்தபோதிலும் ஒரு தாய் ஒருவோதும் சுமையாக இருக்கிறது என்று உணரமாட்டார்.

உங்கள் தாயை நீங்கள் கவனித்தால், அதன்பின் நீங்கள், நேரத்தை எவ்வாறு சரியாக மேலாண்மை என்பது புரியும்.

நான் பெற்றோரிடம் வலியுறத்துவது என்னவென்றால், உங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள். அதேநேரம் மாணவர்கள் தங்கள் திறமையை தங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது.

சில மாணவர்கள் தங்களின் புத்தாக்கத்திறனைப் பயன்படுத்தி, தேர்வில் ஏமாற்று வேலையில் ஈடுபடலாம். ஆனால், அந்த மாணவர்கள் தங்களின் நேரத்தையும், புத்தாக்க, கற்பனைத் திறனை நல்லவழியில் செயல்படுத்தினால், வாழ்க்கையில் வெற்றியின் உச்சத்துக்குச் செல்லலாம்.

வாழ்க்கையில் ஒருபோதும் குறுக்குவழியை தேர்ந்தெடுக்கக்கூடாது, நம்மில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

தேர்வு நேரத்தில் அதிகமாக முயற்சிகளைச் செய்யும் மாணவர்களுக்கு ஒன்று உறுதியளிக்கிறேன், உங்கள் கடின முயற்சிகள் ஒருபோதும் வீணாகாது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.