அரும்பாக்கம் பகுதியில் கவனத்தை திசை திருப்பி, ரூ.1 லட்சம் கொள்ளை..!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் கடையில், கவனத்தை திசை திருப்பி, ரூ.1 லட்சம் கொள்ளையடித்த நபரை தேடி வருகின்றனர்.    

சென்னை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்தவர் அஜ்மிர் அலி (41). இவர், அதே பகுதியில், மொபைல் போன் கடை வைத்துள்ளார்.

இவரது கடைக்கு நேற்று அவரது மனைவி ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் வந்துள்ளார். அங்குள்ள மேசையில் பணத்தை வைத்தார்.

 அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மொபைல்போன் வாங்குவது போல், அஜ்மிர் அலியின் மனைவியிடம் மாடல் குறித்து கேட்டு, அவரின் கவனத்தை திசை திருப்பினார்.

பின்னர், மேசையில் இருந்த பணம், மொபைல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிவிட்டனர்.

இது குறித்து அரும்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், சிசிடிவி கேமராவை வைத்து விசாரிக்கின்றனர்.