தங்களின்‌ நடவடிக்கைகள்‌ மனித நாகரிகத்தின்‌ உச்சம்‌ – முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் பாலா

தங்களின்‌ நடவடிக்கைகள்‌ மனித நாகரிகத்தின்‌ உச்சம்‌ – முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் பாலா

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றார். கொரோனா தொற்று காரணமாக இந்த பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் எளிமையாக நடந்து முடிந்தது. அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் பாலா முதல்முறையாக ட்விட்டர் சமூக வலைதளத்தில் நேற்று இணைந்தார். தனது முதல் பதிவாக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

”மாண்புமிகு முதல்வர்‌ மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,

“தேவையற்ற வாழ்ததுரைகள்‌ தெரிவிப்பதைத்‌ தவிருங்கள்‌’ என்று கேட்டுக்கொண்டீர்கள்‌. ஆனாலும்‌ இதைத்‌ தவிர்க்க முடியவில்லை. தங்களின்‌ ஆற்றல், செயல்‌ மற்றும்‌ பண்பான நடவடிக்கைகள்‌ அனைத்தும்‌ மனித நாகரிகத்தின்‌ உச்சம்‌.
நன்றிகள்‌.

வானோக்கி வாழும்‌ உலகெல்லாம்‌ மன்னவன்‌
கோனோக்கி வாழுங்‌ குடி. (குறள்)”

இவ்வாறு பாலா கூறியுள்ளார்.