கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடும் பெண் சிக்கினார்:

திண்டுக்கல்லில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடும் பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து,15 சவரன் நகை பறிமுதல் செய்தனர்.

 திண்டுக்கல், பஞ்சம்பட்டி பகுதியில் நகை கடை மார்க்கெட்  உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறிக்கும் நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் தலைமையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலக நாதன் கொண்ட தனிப்படையினர்.

தீவிர விசாரணை நடத்தி சிசிடிவி மூலம் துப்பு துலக்கி பஞ்சம்பட்டியை சேர்ந்த அனுபமா என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may have missed