தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 3 பேர் கும்பல் கைது

தர்மபுரி மாவட்டம்,  பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி தாரளமாக விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன் பேரில் மாவட்ட போலீஸ் எஸ்பி கலைச்செல்வன் உத்தரவின் பேரில், பாலக்கோடு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, ஸ்தூபி மைதானம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த தஷ்தகீர் (43), மேல தெரு சக்திவேல் (42), தேவன் (41) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

போலீசர், அவர்களிடம் இருந்து, கேரளாவில் இருந்து வாங்கிவரப்பட்ட லாட்டரி சீட்டுகள் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.