என் சரக்க அடிச்சிட்டு, எங்களையே திட்டுவியா..! வாலிபர் கழுத்தை அறுத்த நண்பர்கள்

தர்மபுரியில், போதையில் ஏற்பட்ட தகராறில் என் சரக்க அடிச்சிட்டு, எங்களையே திட்டுவியா என பீர் பாட்டிலை உடைத்து, வாலிபர் கழுத்தை அறுத்து, தப்பி சென்ற நண்பர்களை தேடி வருகின்றனர்.

 தர்மபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி பெரிய தோரண பட்டம் சாக்கப்பன் மகன் குணசேகரன் (42). இவரின் மனைவி பார்வதி. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கட்ட மேஸ்திரியாக வேலை பார்க்கும், குணசேகரன், ராசிக்குட்டை பகுதியில் தன் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தினார்.

போதை தலைக்கேறியதும் குணசேகரன், நண்பர்களை அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த அவர்கள் எங்க சரக்க அடிச்சிட்டு, எங்களையே திட்டுவியா என கேட்டு, பீர் பாட்டிலை உடைத்து குணசேகரன் தொண்டையில் குத்தி விட்டு தப்பிவிட்டனர்.

அக்கம்பக்கத்தினர் மீட்டு, குணசேகரனை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தையல் போடப்பட்டன. வாய் பேச முடியவில்லை, போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.