வனத்துறையை கண்டித்து ஆடுமாடுகளுடன் ஆர்ப்பாட்டம்..!

மேட்டுப்பாளையம் பகுதியில் வனத்துறையை கண்டித்து, ஆடு மாடுகளுடன், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேட்டுப்பாளையம், குரும்பனூர், தாசம்பாளையம், சமயபுரம், வெல்ஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து கரும்பு, வாழை, தென்னை போன்ற பயிர்களை சேதப்படுத்திகிறதாம்.

இதை தடுக்கக்கோரி, வனத்துறையிடம் விவசாயிகள் கோரிக்கை  விடுத்தனர். வன விலங்குகளை காப்பாற்றும் நோக்கில் மட்டும் செயல்படுவதாக கூறி, பயிர்களை நாசமாவதை வனத்துறை கண்டுக்கொள்ளவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று, வனவிலங்குகளை தடுக்காத வனத்துறை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் ஆடுமாடுகளை அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.