டெல்லி போலீஸ் ஆணையராக அஸ்தானா நியமனம்:

பிராகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு, மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்: உயர் நீதிமன்றம் கருத்து..!

டெல்லி போலீஸ் ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டது, பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டலை மீறியது ஆகாது, அது மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் யூனியன் பிரதேசங்களுக்குப் பொருந்தாது என்றுடெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி பிராகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவல் ஆணையர்களை நியமிக்கும்போது அவர்களுக்கு 2 ஆண்டுகள் பணிக்காலம் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.


ஆனால், எல்லைப் பாதுகாப்புப் படையின் டிஜிபியாக இருந்த ராகேஷ் அஸ்தானாவை டெல்லி போலீஸ் ஆணையராக ஓர் ஆண்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் நியமித்தத உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎன் படேல்,நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர்கள் வாதங்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் அமர்வு கூறியதாவது:


பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் என்பது மாநிலத்தில் டிஜிபியை நியமிப்பதற்குத்தான். அந்த வழிகாட்டல்கள் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும், டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்குப் பொருந்தாது.

மாநில போலீஸாரில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள மூத்த 3 அதிகாரிகளில் ஒருவரை பரிந்துரை செய்து அதில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் டிஜிபியாக தேர்வு செய்யப்படுவோருக்கு 2 ஆண்டுகள்வரை பதவிக்காலம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த வழிகாட்டல்களில் யூனியன்  பிரேதேசங்களுக்கு என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டவில்லை.யூனியன்பிரதேசங்களில் போலீஸ் ஆணையர்களை நியமிப்பது குறித்து அந்த வழிகாட்டலில் இல்லை.


உச்ச நீதமன்றத்தின் உத்தரவு மாநிலத்தில் டிஜிபியை நியமிக்கும் போது மாநில அரசுகள்பின்பற்ற வேண்டிய விதிகளாகும். ஆனால் டெல்லி போன்ற யூனியன் பிரதேசம் தனித்துவமானது, இங்கு போதுமான அளவு தகுதியான அதிகாரிகள் இருப்பதில் சிக்கல் இருக்கும். ஆதலால், டெல்லி போன்ற இடத்துக்கு பிரகாஷ் சிங் வழக்கு வழிகாட்டல் பொருந்தாது. 


கடந்த 2006ம் ஆண்டிலிருந்து மத்தியஅரசு டெல்லி போலீஸ் ஆணையர்களை நியமிக்க என்ன விதமான விதிமுறைகளை பின்பற்றியதோ அதைத்தான் அஸ்தானா நியமனத்திலும் நடந்துள்ளது.

அப்போதெல்லாம் யுபிஎஸ்சி அல்லது வேறு யாரும் எதிர்ப்புத் தெரிவி்க்கவில்லையே. ஆதலால் டெல்லி போலீஸ் ஆணையரை நியமிக்க நீண்டகாலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் முறை குறித்து மத்தியஅரசுக்கு உத்தரவிடஎந்தக் காரணமும் இல்லை.

அது தேசியதலைநகரில் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஆதலால், அஸ்தானா நியமனத்தில் பிரகாஷ் வழக்கில் வழிகாட்டல்கள் பின்பற்றப்படவில்லை என்ற கேள்வி பொருந்தாது.
இவ்வாறு நீதிபதிகள் அமர்வு தெரிவித்தனர்.

You may have missed