இன்று இரவு முதல் டெல்லியில் 7 நாட்கள் முழு லாக்டவுன்.. விரைவில் அறிவிப்பு

லாக்டவுன்

கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளதால் இன்று முதல் தலைநகர் டெல்லியில் 7 நாட்கள் முழு லாக்டவுன் விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்திய நகரங்களில் மும்பைக்கு அடுத்தப்படியாக டெல்லியில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த சூழ்நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நகரில் 7 நாட்கள் லாக்டவுன் விதிக்க அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை கவர்னர் அனில் பைஜலை சந்தித்து டெல்லியின் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக விவாதித்து வருகிறார்.

படுக்கைகள்

இந்த சந்திப்புக்கு பிறகு இன்று இரவு முதல் 7 நாட்களுக்கு தலைநகர் டெல்லியில் முழு லாக்டவுன் அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் 100க்கும் குறைவான ஐ.சி.யூ. படுக்கைகள் மட்டுமே உள்ளன என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.