பிறந்த நாளில் நடந்த சோகம் நடன கலைஞர் தற்கொலை வெறும் குவார்ட்டருக்கு உயிரை மாய்த்தாரா?

துணிவு, ஜெயிலார் உள்ளிட்ட படங்களில் நடித்த நடன கலைஞர் மாடியில் இருந்து குதித்து இறந்தார்.

வெறும் குவார்ட்டர் மது இல்லை என அவர் உயிரை மாய்த்தாரா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை, பெரியமேடு, அல்லிக்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ்(42). இவர், டிக் டாக் மூலம் தனது நடன வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆனார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் நடனம் வெளியானது. இதனால், நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் தனது நடனத்துக்கு உண்டான ஒரு நளினத்தை உருவாக்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

அஜீத் நடித்த துணிவு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு, புளியந்தோப்பு , கேபி பூங்கா பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து ரமேஷ் தற்கொலை செய்துக்கொண்டார்.

புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர். இந்த நிலையில், ராமேசுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

நேற்று இரண்டாம் மனைவி குடியிருக்கும் பகுதியில் தான் ரமேஷ் தற்கொலை செய்துக்கொண்டார்.

பிறந்த நாள் அன்று, இரண்டாம் மனைவியிடம் மது அருந்த ரமேஷ் பணம் கேட்டார், அவர் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த விரக்தியில் தான் அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

குவார்ட்டர் இல்லை என அவர் உயிரை மாய்த்துக்கொண்டாரா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. முதல் மனைவியும், ரமேஷ் மரணம் கொலை என போலீசில் புகார் அளித்தார்.

இதனால், அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? என்ன காரணம் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.