நண்பர் வீட்டில் சிலிண்டர் திருட்டு; பெயிண்டர் கைது

சென்னை, வியாசர்பாடி பகுதியில் நண்பர் வீட்டில் சிலிண்டர் திருடிய, பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, வியாசர்பாடி, தேசிகானந்தபுரம், முதல் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரின் மனைவி விமலா (60).

இவர், காவல் ஆணையர் அலுவலக உணவகத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர். இவரது  மகன் தினகரன், இவர், பெயிண்டர்.

நேற்று முன் தினம், விமலா, தினகரன் ஆகியோர் வேலைக்கு சென்றனர்.

பின்னர், இரவு வீடு திரும்பியபோது, சமயலறையில்
இருந்த சிலிண்டர் திருடப்பட்டு இருந்தது.

வியாசர்பாடி போலீசில், விமலா கொடுத்த புகாரில், தினகரன் நண்பர் வியாசர்பாடி, சுந்தரம் 6வது தெருவை சேர்ந்த ராமு மகன் பெயிண்டர் பழனி (33) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

போலீசார், பழனியை பிடித்து விசாரணை நடத்தியதில், சிலிண்டர் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.