காமென்வெல்த் விளையாட்டு: மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மாலிக் முதல்முறையாக தங்கம் வென்றார்

பிர்மிங்ஹாமில் நடந்து வரும் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் 62கிலோ ப்ரீஸ்டைல்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்றார்.

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான சாக்‌ஷி மாலிக், கடந்த 2018ம் ஆண்டு கோல்ட்கோஸ்டில் நடந்த காமென்வெல்த் போட்டியிலும் வெண்கலம் மட்டும வென்றார்.

ஆனால் இந்த முறை தங்கம் வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கி தங்கம் வென்றார். இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கம் 22 ஆக அதிகரித்துள்ளது.

மல்யுத்தப் பிரிவில் ஏற்கெனவே அன்சு மாலிக் வெள்ளிப்பதக்கத்தையும், பஜ்ரங் பூனியா தங்கத்தையும் வென்ற நிலையில் தற்போது சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றுள்ளார்.

கனடா வீராங்கனை அன்னா கோடினோ கோன்சாலஸை சாய்த்து சாக்‌ஷி மாலிக் தங்கப் பதக்கத்தை வென்றார்.

காலிறுதியில் இங்கிலாந்து வீராங்கனை கெஸ்லி பார்னஸுடன் சாக்‌ஷி மாலிக் மோதினார். இதில் 10-0 என்ற கணக்கில சாக்‌ஷி மாலிக் அபாரமாக வென்றார்.

அரையிறுதியில், எமிலினி எடானே கோலேவை சாக்‌ஷி மாலிக் தோற்கடித்தார். இறுதியப் போட்டியில் கனடாவீராங்கனை கோன்சாலையை சாய்த்து தங்கம் வென்றுள்ளார் சாக்‌ஷி மாலிக்.

முதல் சுற்றில் 3-2 என்ற கணக்கில சாக்‌ஷி மாலிக் பின்னடைந்தார். அதன்பின் கோன்சலாஸின் லெக் அட்டாக்கால் சாக்‌ஷி மாலிக்கால் தப்பமுடியவில்லை.

ஆனால், மீண்டுவந்த சாக்‌ஷி மாலிக் அதிரடியாக ஆடி அடுத்தடுத்து புள்ளிகளைப்பெற்று வென்றார்.

2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் 4-0 என்று பின்தங்கி இருந்த சாக்‌ஷி மாலிக் அடுத்தடுத்து புள்ளிகளை வென்று வெண்கலம் வென்றது நினைவிருக்கும்.

அதேபோல இந்தப் போட்டியிலும் சாக்‌ஷி மாலிக் செயல்பட்டு தங்கம் வென்றார்.

கடைசியாக 2014ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காமென்வெல்த் போட்டியில் சாக்‌ஷி மாலிக் வெள்ளி வென்றிருந்தார். 2015 ஆசிய மல்யுத்தப் போட்டியில் வெண்கலமும், சாக்‌ஷி மாலிக் கைப்பற்றி இருந்தார்.