3 நாட்கள் தேடுதலுக்கு பிறகு, மணி முத்தாற்றில் மூழ்கிய மாணவர் உடல் கரை ஒதுங்கின..!

கடலூர் மாவட்டம், வேப்பூர், நல்லூர் மணி முத்தாறில் குளிக்க சென்று மூழ்கிய மாணவர் உடல் கரை ஒதுங்கின. மூன்று நாள் தேடுதலுக்கு பிறகு, உடல் உப்பிய நிலையில் மீட்கப்பட்டன.

கடலூர் மாவட்டம், வேப்பூர்,  நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரின் மகன் சூர்யா (13). சக்திவேல் மகன் பிரதீப் (13) ஆவர். இவர்கள் இருவரும், கடந்த 22ம் தேதி அன்று மணி முத்தாறில் குளிக்க சென்றனர்.

இருவருக்கும் நீச்சல் தெரியாதாம். இந்த நிலையில், ஆற்றில் இருவரும் அடித்து செல்லப்பட்டனர். பிரதீப், கரையோர சீமை கருவேல மரத்தின் கிளையை பிடித்து உயிர் தப்பினார். சூர்யா அடித்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில், மூன்று நாட்கள் தேடுதலுக்கு பிறகு, சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில், விருத்தாசலம் கச்சி மெருமாந்தம் அருகே கரையில் சூர்யா உடல் உப்பிய நிலையில் மீட்கப்பட்டன.  உடலை கைப்பற்றி, வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.