நகை கடையில் கைவரிசை..! சிசிடிவியில் சிக்கிய நபர்:

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில், நகை கடையில், கைவரிசை காட்டிய நபர், சிசிடிவியில் சிக்கினார் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ராஜாஜி சாலை பகுதியில், நகை கடை உள்ளிட்ட வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றனர். காலை முதல் இரவு 9 மணியளவில் , நகை கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும் குறிப்பாக ராஜாஜி சாலையில் நகை கடை அடமானம், பழுது பார்த்தல் உள்ளிட்டவைகளில் கூட்டம் அலைமோதும்.

இதில், அருள் நாதன் என்பவருக்கு சொந்தமான நகை கடை ஒன்று உள்ளது. அதில் நகை வாங்குவது போல் வந்த மர்ம நபர்கள் சிலர் குழந்தைகளின் 7 தங்க காப்புகள் இரண்டு சவரன் தங்க மோதிரம்  ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

பின்னர், கடையின் உரிமையாளர் பரிசோதித்தபோது நகை திருடுப்போனது தெரியவந்தது. சிசிடிவி கேமிரா மூலம் பார்த்த போது நகை திருடிய இரண்டு பேர் சாவகாசமாக நடந்து போறது தெரியவந்தது. போலீசார் அந்த சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed