குளிக்க சென்ற போது விபரீதம், பண்ணை குட்டையில் மூழ்கி மாடு மேய்க்கும் சிறுவன் பலி

திருச்சி, மணப்பாறை பகுதியில், பண்ணை குட்டையில் குளிக்க சென்ற மாடு மேய்க்கும் சிறுவன் பலியானான்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, சித்தாந்தம், கரிச்சாம்பட்டியை சேர்ந்தவர்  சின்னத்துரை, இவர் விவசாயி ஆவார். இவரின் மகன் மணிகண்டன் (17). இவர் அந்த பகுதியில் ஆடு, மாடுகளை மேய்துக் கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன், ஆலம்பட்டி, புதுர்ரை சேர்ந்த துரைசாமியின் தோட்டத்து பண்ணை குட்டையில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாமல், மணிகண்டன் நீரில் மூழ்கினார். பின்னர் மூச்சு திணறி உயிரிழந்தார். தகவல் கிடைத்து தீயணைப்பு துறையினர் மணிகண்டன் உடலை மீட்டனர். மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.