கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திர போலீசாருடன் விஷேச கூட்டு நடவடிக்கை: டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

தமிழகத்தில், போதை பொருளை முற்றிலும் தடுத்து, கஞ்சா பயிரை ஒழிக்க, ஆந்திர போலீசாருடன் விஷேச கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்
கல்லூரி, பல்ளிகளுக்கு அருகில் கஞ்சா குட்கா பொருட்கள் விற்பதை தடுக்க ஒரு மாதம் ஒழிப்பு வேட்டை நடத்தப்பட வேண்டும்.

குட்கா, கஞ்சா பொருள் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். குட்கா மொத்த கொள்முதல் நபர்கள் மீதும் கைது நடவடிக்கை, போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை, அதில் இருந்து மீட்க மன நல ஆலோசர்களை நாடலாம்.

பள்ளி, கல்லூரிகள் அருகில் குடிய்ருப்பவர்களை கொண்டு, போலீசார் வாட்சப் குழு ஆரம்பித்து, போதை பொருளின் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். கஞ்சா பயிரை ஒழிக்க, ஆந்திர போலீசாருடன் விஷேச கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில போதை பொருள் தடுப்பு போலீசார், அதை முன்னின்று செயல்படுத்த வேண்டும், ஒரு மாதம் இடைவிடாமல் காவல் துறை நுண்ணறிவு காவலர்கள் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.