காமென்வெல்த் விளையாட்டு: சவுரவ் கோஷல் புதிய வரலாறு! ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார்

பிரிட்டனில் நடந்துவரும் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

காமென்வெல்த் விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாக பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய வரலாற்றை சவுரவ் கோஷல் படைத்தார்.

இதற்கு முன் ஸ்குவாஷ் பிரிவில் எந்த வீரரும் பதக்கம் வென்றது இல்லை.

உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் சவுரவ் கோஷலை எதிர்த்து இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வில்ஸ்ட்ராப் மோதினார்.

இந்தப் போட்டயில் ஜேம்ஸை 11-6, 11-1, 11-4 என்ற கேம்களில் வென்று சவுரவ் கோஷல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

காமென்வெல்த் போட்டியில் சவுரவ் கோஷல் பெறும் 2-வது பதக்கம் இதுவாகும்.

கடந்த 2018ம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பிலகலுடன் சேர்ந்து வெள்ளி வென்றார் சவுரவ் கோஷல் என்பது குறிப்பிடத்தக்கது.

கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பா, ஹரிந்தர் பால் சிங் இருவரும் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.