அலர்ஜிக்கு சிகிச்சைக்கு சென்ற, பெண்ணிடம் சில்மிஷம்; வார்டு பாய் கைது

சென்னை, ராயபுரம் பகுதியில், அலர்ஜிக்கு சிகிச்சைக்கு சென்ற, பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வார்டுபாய் கைது செய்யப்பட்டார்.

சென்னை, ராயபுரம் பகுதியில்,  தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனைக்கு 32 வயது பெண், அலர்ஜிக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு இருந்த சிக்கிரந்த பாளையத்தை சேர்ந்த வார்டு பாய் தனசேகர்(38) என்பவர், பெண்ணை அங்கு தொட்டு, இங்கு தொட்டு, சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

அங்கிருந்து வந்த அந்த பெண், ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தனசேகரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.