கொலை செய்து விடுவார்கள் என மீனவரை சரமாரியாக வெட்டிய கும்பல்: எண்ணூரில் பரபரப்பு சம்பவம்..!

சென்னை, எண்ணூரில், தன்னை கொலை செய்து விடுவார்கள் என பயந்து, மீனவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பலில், 3 பேர் கைதாகினர்.
   

சென்னை, திருவொற்றியூர், எண்ணூர், சுனாமி குடியிருப்பு 81வது பிளாக்கை சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் சூர்யா (21). இவர், மீனவர் ஆவார். இவரின் அக்கா சூர்யகலா, இவரின் கணவர் ஆகாஷ் (22) ஆவார். கடந்த செப்டம்பர் மாதம் அதே பகுதி, 42வது பிளாக்கை சேர்ந்த குணசேகரன் மகன் சத்தியா (22) என்பவர் நண்பர்கள் சிலருடன் மதுப்போதையில் ஆகாசை வெட்டியுள்ளனர்.


இதனால், சூர்யா, ஆகாஷ் ஆகியோர், சுனாமி குடியிருப்பில் வைத்து, சத்தியாவை மிரட்டி வந்தனர். இதனால், சத்தியா அவர்கள் தன்னை கொலை செய்து விடுவார்களோ என பயந்தார். 

ராமக்கிருஷ்ணா நகர், 3வது தெருவில் வைத்து, சத்தியா உள்ளிட்ட 5 பேர் சூர்யாவை தலை, தோள்பட்டை ஆகியவற்றில் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில், சூர்யா சிகிச்சை பெற்று வருகிறார். எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சத்தியா,போதை சரண் (21), ஸ்ரீதர் (21) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பு ராஜ், சேட்டு ராஜேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.