பணம் கொடுக்க மறுத்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு..! வழிப்பறி ஆசாமிகள் அட்டகாசம்:

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில், பணம் கொடுக்க மறுத்த வாலிபருக்கு சரமாரியாக அரிவாளால் வெட்டி, வழிப்பறி ஆசாமிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, கொருக்குப்பேட்டை, அன்பழகன் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (50). இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் வேலை முடிந்து, கடந்த திங்கள் கிழமை அன்று மீனாம்பாள் நகர் பாலத்தின் அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.


அப்போது அங்கு 3 பைக்கில் வந்த 5 மர்ம நபர்கள், தேவேந்திரனை மிரட்டி பணத்தையும், செல்போனை கேட்டனர், ஆனால் அவர்,   கொடுக்க மறுத்தார். உடனே தேவேந்திரனை அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டி, அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு பைக்குகளில் தப்பிவிட்டனர்.


இச் சம்பவத்தில் பலத்தக் காயமடைந்த தேவேந்திரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.