பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த, வாலிபருக்கு அடி – உதை விழுந்தது.

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் பக்கத்து வீட்டு பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த, வாலிபருக்கு தர்ம அடிகொடுத்து  போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகர் சையது இஸ்ரித், இவரின் மகன் சையது ரிஸ்வான் (22). இவர் அருகில் வசிக்கும் பெண் ஒருவரை நோட்டமிட்டு வந்துள்ளார். காலை நேரத்தில், அவரின் கணவர் வேலைக்கு சென்று விட்டார். பின்னர், அந்த குளிக்க சென்றார்.

அப்போது, அந்த வீட்டுக்குள் நுழைந்த சையத் ரிஸ்வான், குளிப்பதை எட்டிப்பார்த்தார். ஆனால், அந்த பெண் பார்த்து விட்ட, கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வந்து சையத் ரிஸ்வானை பிடித்து தர்ம அடி கொடுத்து, கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர்.

பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் , சையத் ரிஸ்வானை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.