ஓடும் காரில் கத்தி கூச்சல்: மதுப்போதையில் பெண் இன்ஜினீயரிடம் பாலியல் அத்து மீறலா..! போலீஸ் விசாரணை:

சென்னை, நுங்கம்பாக்கத்தில், ஓடும் காரில் உடன் வந்த ஆண் நண்பர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் மதுப்போதையில் பெண் இன்ஜினீயர் கத்தி கூச்சலிட்டாரா என போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில், இன்று அதிகாலை கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இலங்கை தூதரகம் அருகே வந்த காரில் இருந்த பெண் ஒருவர் கத்தி கூச்சலிட்டார். இதை பார்த்த போலீசார் காரை விரட்டி சென்று மடக்கினர்.


காருக்குள் பெண் ஒருவர், மூன்று ஆண்கள் இருந்தனர். அந்த பெண், மூன்று பேரையும் செருப்பால் அடித்தபடி இருந்தார். போலீசார் உடனடியாக அந்த பெண்ணிடம் விசாரித்ததில் நான் யார் என எனக்கே தெரியவில்லை.

இவனுங்கதான் என்னை கூட்டிட்டு வந்தானுங்க என போதையில் உளறினாராம். போலீசார் அதிர்ந்து, காரோடு அவர்களை நுங்கம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தாராம்.


விசாரணையில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அவர்கள், சென்னையில், ஐடி நிறுவனத்தில், இன்ஜினீயராக வேலை பார்த்து வருவதும், ஜெமினி அருகே உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலில் மது அருந்தியதும் தெரியவந்தது.

பெண் இதில், சம்மந்தப்பட்டிருப்பதால் ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனரா எனவும் விசாரணை தொடங்கியது.