அரிசி வண்டு மருந்து சாப்பிட்டு குடோன் பெண் ஊழியர் தற்கொலை..!

சென்னை, தண்டையார் பேட்டை பகுதியில் அரிசி வண்டு மருந்து சாப்பிட்டு, குடோன் பெண் ஊழியர் தற்கொலை செய்துக் கொண்டார். உடலை வங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டன.
   
சென்னை, தண்டையார் பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை நான்காவது சந்து பகுதியை சேர்ந்தவர் சோலையப்பன். இவர் டெம்போ டிரைவர் சிவகாமி (42).

இவர் மகள் வரலட்சுமி (21), தம்பிகள் அசோகுமார்(19), அபினேஷ்குமார் (17). ஆவர், அதே பகுதியில் உள்ள அரிசி குடோனில், தரக்கட்டுப்பாட்டு பிரிவில், கடந்த 10ம் மாதங்களாக வரலட்சுமி வேலை பார்த்து வந்தார்.


இந்த நிலையில், காலை 9 மணிக்கு வேலைக்கு சென்ற வரலட்சுமி , மதியம் 2 மணியளவில் மயக்கமுற்று இருப்பதாக வந்த தகவலையடுத்து, பெற்றோ, உறவினர்கள் அங்கு சென்று, வ்ரலட்சுமியை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

ஆனால், அங்கு இரவு , சிகிச்சை பலனின்றி வரலட்சுமி உயிரிழந்தார். தகவல் கிடைத்து, புது வண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து, வரலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அரிசியில் வண்டு வராமல் இருக்கும் பருந்து பவுடரை சாப்பிட்டு, வரலட்சுமி தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.


ஆனால், அவர் தற்கொலைக்கு காரணம் என்ன என தெரியவில்லை. இதையடுத்து, வரலட்சுமி சாவுக்கு காரணம் குடோன் நிர்வாகம் தான் என உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். பின்னர், போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டன.

You may have missed