குடித்ததால், மனைவி பேச மறுப்பு..! வெல்டர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை, கொடுங்கையூர் பகுதியில், மது குடித்து வந்ததால் மனைவி பேச மறுத்த விரக்தியில், வெல்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

சென்னை, கொடுங்கையூர், கிருஷ்ண மூர்த்தி சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகில் வசிப்பவர் வீரப்பன். இவரின் மகன் பிரபாகரன் (33), இவருக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.
வெல்டர் வேலை செய்து வந்தார்.

அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மனைவி கண்டித்தும் தினமும் குடிப்பாராம். நேற்று இரவு, இவர் வீட்டிற்கு மது குடித்து வந்தார்.

இதனால், மனைவி, அம்மா, குழந்தைகள் என யாரும் பேசவில்லையாம். இதனால் மன விரக்தி அடைந்த பிரபாகரன், மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.