தனியார் குடோனில் பதுக்கிய ரூ.1.25 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்..!

சென்னை, மணலி புது நகர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.25 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை, மணலி புதுநகர், விச்சூர் வெள்ளாங்குளம், லட்சுமி நகரில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. அங்கு செம்மரக்கட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில், ஆந்திர மாநில காவல்துறையின் செம்மரக்கட்டைகள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அந்த பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு சென்னை வந்தார்.
அவர்கள், சென்னை காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கிருந்த ரூ.1.25 கோடி மதிப்பிலான இரண்டரை செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் விசாரணை செய்தனர்.
விசாரணையில், அந்த ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கட்டைகளை கடத்திக் கொண்டு வந்து, அங்கு பதுக்கி வைத்திருப்பபதும், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அந்த கட்டைகளை கடத்துவதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர காவல்துறையினர், அந்த இடத்தின் உரிமையாளர், செம்மரக்கட்டைகளை அங்கு வைத்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.