கட்டிலில் இருந்த விழுந்தவர் வீட்டுக்குள் தேங்கிய மழை நீரில், பிணமாக கிடந்தவர் மீட்பு..!

சென்னை, மணலி பகுதியில் கட்டிலில் இருந்து விழுந்த ஒப்பந்த தொழிலாளி வீட்டுககுள் தேங்கிய மழை நீரில் பிணமாக கிடந்தார்.

 சென்னை, மணலி, சின்னசேக்காடு, தேவராஜன் தெருவில் வசித்து வந்தவர் ஜெயகோபி (45). இவர், சி.பி.சி.எல் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செந்தாமரை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இவரது வீட்டை சுற்றி மழைநீர் தேங்கியது, வீட்டிற்குள்ளும், மழைநீர் புகுந்தது. இதனால், ஜெயகோபி தனது மனைவியை பக்கத்து தெருவில் உள்ள அவரது அம்மா வீட்டுக்கு அனுப்பினார்.

ஜெயகோபி  மட்டும் வீட்டில் நேற்றிரவு மழை நீரில் நடுவே கட்டிலில் தூங்கிகொண்டிருந்தார். இன்று காலை செந்தாமரை தனது வீட்டிற்கு வந்தார். அப்போது, அங்கு கணவரை பார்த்தபோது, அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். 

தேங்கியிருந்த மழை நீரில்  இறந்து நிலையில் மிதந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தீயணைப்ப்ய் துறைக்கு போன் செய்தார்.

தீயணைப்பு அதிகாரி முருகானந்தம் தலைமையிலான வீரகள் வந்து, பின்னர் மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஜெயகோபி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.