சென்னையில் இன்று முதல் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு.. ரயில்வே தகவல்

மின்சார ரயில் சேவை

சென்னையில் இன்று முதல் மின்சார ரயில் சேவை அதிகரிப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மின்சார ரயில் சேவைகளும் குறைக்கப்பட்டது. வார நாட்களில் 151 மின்சார ரயில் சேவை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

மின்சார ரயில்

இந்நிலையில் சென்னையில் இன்று முதல் மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார ரயில் சேவை 151லிருந்து 208ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்

மேலும், இன்று முதல் மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 86 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 32 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 24 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 66 ரெயில் சேவையும் என 208 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.