சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதவியேற்பு

சென்னை பெருநகர காவல் துறையில் புதிய போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதியேற்று கொண்டார். அவருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

 சென்னை பெருநகர காவல் துறையில் கமிஷனராக மகேஷ் குமார் அகர்வால் இருந்தார், அவர் இன்று மாற்றப்பட்டார். புதிய போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த அவர். சென்னை கமிஷனராக பதவியேற்று கொண்டார். அவருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கூடுதல் டிஜிபியாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டு அவரும் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.