போதை நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டு தகராறு..! காவலர் பணியிடை நீக்கம்:

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில், போதை நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டு, தகராறில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை, வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் விமல் ராஜ். இவர், காசிமேடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலர் ஆவார். இவர், நண்பர்கள் இரண்டு பேருடன் ஆட்டோவில் கீழ்ப்பாக்கம் சென்றார். அங்கு, மது அருந்தினார்.

பின்னர், நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டு, அங்குள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டாராம். தகவல் கிடைத்து, போலீசார் வந்தவுடன் விமல் ராஜ் பயந்து அங்கிருந்து தப்பிவிட்டார்.

அப்போது, அவரின் செல்போனை அங்கேயே தவறவிட்டார். போலீசார், இரண்டு பேரை பிடித்து விசாரித்து. செல்போன் வைத்து,விமல் ராஜ் , போலீஸ் என தெரியவந்தது.

இதையடுத்து, வடசென்னை இணை கமிஷனர் துரைக்குமாருக்கு புகார் கொடுக்கப்பட்டன. அவர், விமல் ராஜை பணியிடை நீக்கம் செய்தார்.