மருந்து கலந்த பாயாசம்
மயக்கமடைந்த மூதாட்டியிடம்,
நகை அபேஸ் செய்த பெண்

சென்னை, ராயபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு, பாயாசத்தில் மயக்க மருந்து கலந்துக்கொடுத்து நகை பறித்த பெண்ணை தேடி வருகின்றனர்.

சென்னை, ராயபுரம், கோவில் தெருவை சேர்ந்தவர் கனகாம்பாள் (85), இவர் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து தனியாக வசித்து வருகிறார்.

இவரின் மகள் நடராஜர் மனைவி சாமளா (61), அதே பகுதியில் வசிக்கிறார். இந்த நிலையில், தனியாக இருப்பதை தெரிந்து. கனகாம்பாள் வீட்டிற்கு மர்ம பெண் ஒருவவர் வந்தார். அவர், பக்கத்து வீட்டில் இருப்பதாக கூறி, விஷேசம் என கூறி, மயக்க மருந்து கலந்த பாயாசத்தை கனகாம்பாளுக்கு கொடுத்தார்.

அதை குடித்தவுடன், கனகாம்பாள் மயங்கினார். இதையடுத்து, அவர் கழுத்தில் இருந்த 2 சவரன் செயின், ஒரு சவரன் வளையல் ஆகியவற்றை பறித்து சென்றார். அம்மாவை தேடி வந்த சாமளா, கனகாம்பாள் மயங்கி கிடப்பதை பார்த்து, மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு, அவர் குணமானதும் நடந்ததை கூறினார். இதை தொடர்ந்து சாமளா ராயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார், அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.