அவசரமாக பேச வேண்டும் என செல்போனுடன் ஓடிய நபர் கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், அவசரமாக பேச வேண்டும் என கூறி, செல்போனுடன் ஓடிய நபரை கைது செய்தனர்.

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரின் மகன் ஜோசப் ஆண்டோனி (52). இவர், கைக்கடிகாரம் பழுதுப்பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது, மர்ம நபர் ஒருவர், மிகுந்த பாவத்துடன் ஜோசப்பிடம் வந்து சார் மிக அவசரம், என் அம்மாவுக்கு போன் செய்ய வேண்டும் என கெஞ்சினார். ஜோசப், இரக்கப்பட்டு அவருக்கு பேச தன்னுடைய செல்போனை கொடுத்தார்.

பேசுவது போல் நடித்த அந்த நபர், செல்போனை தப்பியோடி விட்டார். இது தொடர்பாக,புகாரின் பேரில், புது வண்ணாரப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஜோசப்பிடம் செல்போனை எடுத்துக்கொண்டு ஓடிய புது வண்ணாரப்பேட்டை அம்மணியம்மன் தோட்டம் நான்காவது தெருவை சேர்ந்தவர் குமார் மகன் நரேஷ் (18) என்பவரை கைது செய்தனர். மேலும்,இந்த வழக்கில், சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேரை தேடி வருகின்றனர்.